
இல்லை எனச் சொல்லி கை கழுவி விட்டாலும்
என் பிஞ்சுக் கைகள் உன் கைப்பற்றும்
கடைசி வரை உன்னைக் காப்பாற்றும்!
நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய ஆலயத்தின் முகப்பு
ஆலய வரலாறு
எல்லா ஸ்தலங்கள் போலவே இத்திருக் கோவிலுக்கும் ஒரு சிறப்பான வரலாறு உண்டு.
ஆலயம் ஒன்று அமைய வேண்டும் என்ற அம்பிகையின் உள்ளக்கிடக்கை அம்மாவின் அருள் வாக்கில் வெளிப்பட்டு அதன்படி மடிப்பாக்கத்தில் சதாசிவம் நகர் என்ற இடத்தில் ஸ்ரீ ப்ரம்ம சக்தி ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது.
இந்த ஆலயத்தைப் பொருத்தமட்டில், ஆலயம் அமைய வேண்டிய இடம், ப்ரதிஷ்டை செய்யப்பட வேண்டிய மூர்த்தங்கள், பூஜை முறைகள் பற்றிய எல்லா விவரங்களையும் ஸ்ரீ பாலா அம்மாவே தனது அருள்வாக்கின் மூலம் வெளிப்படுத்தினார்கள், அதன்படி இந்த ஆலயம் அமைக்கப்பட்டதே இதன் சிறப்பாகும்.
அம்மா அவர்கள் இன்றுவரை தன்னிடம் வரும் பக்த்தர்களுக்கு சத்குருவாக நின்று துன்பத்தில் இருப்பவரின் கண்ணீரை துடைத்து நமக்கெல்லால்ம் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருகிறார்.
2001ல் கட்டப்பட்ட இந்த ப்ரம்ம சக்தி ஆலயம் மறுபடியும் அம்பாளின் உத்தரவுப்படி ஸ்ரீ சந்தான பகவதி, ஸ்ரீ வாராஹி, ஸ்ரீ ப்ரத்தியங்கிரா போன்ற மூர்த்தங்களுக்கு தனித்தனி சன்னதியாக கட்டுவதற்கும் வேலை ஆரம்பிக்கப்படு படுவதாக உள்ளது.
மேலும் நுழைவாயிலில் நவதுர்க்கை அமைந்த ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்கி முடியும் தருவாயில் இருக்கிறது. பக்தர்கள் அனைவரும் இந்த தெய்வத்திருப்பணியில் கலந்து கொண்டு ஸ்ரீ ப்ரம்ம ஸ்ரீ பாலா அம்மாவின் ஆசியும், ஸ்ரீ ப்ரம்ம சக்தியின் பேரருளையும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பக்தர்கள் அனைவரும் வாருங்கள், பயனடையுங்கள்!