
Brahmmasakthi
ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ப்ரம்ம சக்தி அம்மா சரணம்
அகிலாண்ட கோடி ப்ரம்மாண்ட நாயகியாம் அன்னை அபிராமவல்லி ஓம் ஸ்ரீ ப்ரம்ம சக்தி அம்மாவின் பரிபூர்ண அனுகிரஹத்தினால் மஹா சக்தியைப் பெற்று சங்கடங்களைத் தீர்த்துவைக்க நாடிவரும் பக்த்தர்களை பரிவுடனும், கனிவுடனும், பாசத்துடனும் அரவணைத்து தியான சக்ததியால் குறைகளைத் தீர்த்து வைக்கும் உன்னதமான இறைப்பணியை நல்லறம் காத்திட்டு நீதிவழுவா நெறிமுறைகளை வழிமுறையாக கடைபிடித்து புனிதமான தெய்வப் பணியை ஆற்றிவரும் மாதர்குலத் தெய்வத்தாய்.
ப்ரம்மஸ்ரீ பாலா அம்மா அவர்களின் திருவடிக்கு எனது சரணங்கள். மலையலவு சோதனை எனக்கு ஏற்பட்டபோது தனது சக்தியினால் கடுகளவு பொடியாக்கி அதனை கடலில் கலந்துவிடச் செய்த ப்ரம்ம சக்தி அம்மாவின் மகிமையை, மகாசக்தியை, நான் செல்லுமிடமெங்கும், சந்திக்கும் மக்களிடையே பறைசாற்றிவருகிறேன் என்றால் அதுமிகையாகாது. வழக்கு தொடர்பாக மேலும் எனக்கு இடர் ஏதும் வராதவாறு அம்மாவின் சக்தி எனக்கு அரணாகவும், கவசமாகவும் இருக்க அருள்புரிவாளாக.
ப்ரம்மஸ்ரீ பாலா அம்மா- இருகரம் கூப்பி ப்ரம்மசக்தி அம்மாவை வணங்குவது போல் காட்சிதரும் படம் ஒன்றினை எனது இல்ல பூஞை அறையில் பிரதானமாக வைத்து நாளும் மலர்களால் அலங்கரித்து (மற்ற தெய்வப்படங்களுக்கு மத்தியில்) ஓம்ஸ்ரீ ப்ரம்ம சக்தி அம்மா சரணம் என 27முறை பாராயணம் செய்து மகாதீபாராதனை காட்டி வழிபாடு செய்துவருகிறேன் என்று சொன்னால் நம்புவது கடினமே. எனக்கு யாராலும் எந்த நிலையிலும் எந்த துஷ்ட சக்தியாலும் இடர்பாடுகளும், சங்கடங்களும் வாராவண்ணம் அம்மாவின் சக்தி எனக்கு அருள்கூர்ந்து காத்திடவும் நான் செய்கின்ற எந்த ஒரு நல்ல, ஆன்மீக காரியங்கள், தர்மகாரியங்கள் எவ்வித ட்தடையுமின்றி சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடந்தேறிட வேண்டுமென நாளும் மனம் உருகி, கண்ணீர் மல்கி அம்மாவை வழிபடுதல் நான் பெருமிதம் கொள்கிறேன்.
சிலைவடிவிலே உள்ள தெய்வங்களை நாம் வணங்கி வழிபடும்போது தெய்வத்திற்கும் - பக்தர்களுக்கும் இடையே ஒருபாலமாக இருந்து அர்ச்சகர்கள் வேத மந்திரங்களைச் சொல்லி இறைவனிடமிருந்து வரங்களைப் பெற்றுத் தருவதுபோல, ஸ்ரீ ப்ரம்மசக்தி அம்மாவின் மகிமை, மஹாசக்தி சிறப்பு, பெருமை ஆகியவற்றை தனது தியான சக்தியின் வாயிலாக வெளிக்கொணர்ந்து பக்தர்களுக்கு ஒளிகாட்டி வழிநடத்திச் செல்லும் ப்ரம்மஸ்ரீ பாலா அம்மாவின் பெருமை, புகழ், சக்தியின் வெளிப்பாடு திக்கெட்டும் பரவிட குடத்தில் இட்ட விளக்காக இல்லாமல் குன்றின்மேல் இடப்பட்ட விளக்கென அகிலமெங்கும் பிரகாசித்து ஒளிச்சிதறல் பரவட்டும்.
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! அம்மாவின் புகழ்.
திருவடி சரணம் - திருவடி சரணம் - பாலாஅம்மா சரணம், சரணம்.
என்றும் அம்மாவின் நல்லாசியை நாடும்
ஏ.வி.ரங்கராமன், தாசில்தார் (ஓய்வு), 5, திருநகர் காலனி, சத்தியமங்கலம் 638402.
தாய்க்குத் தாய்
மதுரையைச் சேர்ந்த நான் என் மூன்று மகள்களுக்கும் மிகச்சிறந்த முறையில் திருமணம் செய்து கொடுத்தேன். என் ஒரே மகனுக்கும் அவன் ஆசைப்பட்டான் என்ற காரணத்துக்காக அவன் விரும்பிய பெண்ணை மணம் முடித்தேன். பிறகு வேலை நிமித்தமாக வெளியூர் சென்ற மகன் மருமகளுடன் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டான். என் ஒரே மகன் மீது அளவு கடந்த பாசமும், எதிர்பார்ப்பும் வைத்திருந்த நான் அதிர்ந்து போனேன். உடலால் விலகிச் சென்ற மகன் மனதாலும் செயலாலும் மெல்ல விலக ஆரம்பித்தான். என்னுடன் பேசுவதும், என்னை நலம் விசாரிப்பதும் கூட கடமையே என்று பேச ஆரம்பித்தான். முன்பிருந்த அந்த பாசமும் அரவணைப்பும் அவனிடம் எதிபார்த்து ஏமாந்து போனேன். ”அம்மாவை”ப்பற்றி கேள்விப்பட்டபோது மனதில் நம்பிக்கை உண்டானது. அவரிடம் சென்று அழுதேன். “எனக்கு எதுவும் வேண்டாம், அவன் மனைவி மக்களுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஆனால் என் ஒரே மகனின் அன்பும் ஆறுதெலும் எனக்குக் கிடைக்கச் செய்யுங்கள்” என்று அழுதேன். அம்மா எனக்கு ஆறுதல் கூறி “நான் ஒரு பரிகாரம் செய்து தருகிறேன், முதலில் அதை செய், பிறகு நான் பார்த்துகொள்கிறேன்” என்று உறுதி அளித்தார். நானும் அந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தேன். என்ன அற்புதம்... மறுநாளே வெளியூரில் இருந்து என் மகன், பேரன் அனைவரும் என்னிடம் தொலைபேசியில் உரையாடினார்கள். அவன் பேச்சில் பழைய பாசமும் அன்பும் ஆறுதலும் உணர்ந்து மெய்சிலிர்த்துப் போனேன். அந்த பிரம்மசக்தி தாய்மார்களுக்கும், தாய் போன்றவள் என்பது உண்மை.
திருமதி. விஜயலட்சுமி, மதுரை
அம்மாவின் அற்புதங்கள்
என் அண்ணா மன்னிக்கு காரணமே தெரியாமல் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி, அந்த வீட்டைவிட்டே காலிசெய்து கொண்டு போகும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்போது அம்மாவின் சக்தியைக் கேள்விப்பட்டு அவரிடம் ஓடி முறையிட்டேன். அவரும் ”மாலையில் அருள்வாக்கு இருக்கிறது வாருங்கள்” என்று கூறிவிட்டார். நானும் விடாமல் மாலையில் சென்றேன். எங்கள் அண்ணா வீட்டின் ஏசான கோணத்தில் அவர் சொந்தக்காரர்களே எலுமிச்சம்பழம் மந்திரித்து வைத்திருப்பதாகவும், அதை எடுத்து கால்படாத இடத்தில் போட்டுவிடும்படியும் அம்மா கூறினார். நானும் அவ்வாறே செய்தேன். என்ன ஆச்ச்சரியம் இரண்டே நாட்களுக்குள் என் அண்ணாவுக்கும், மன்னிக்கும் உடம்பு நன்றாகத் தேறி அவர்கள் எண்ணத்திலும் மாற்றம் ஏற்பட்டது. இப்போது அதே வீட்டில் சுகமாய் இருக்கிறார்கள்.
இரண்டு வருடமாக என் மகனுக்கு பெண் தேடி அலுத்துப்போய் அதற்கும் அம்மாவிடமே தீர்வுகேட்டேன். அம்மா கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டுவதாகக் கேள்விப்பட்டேன். நானும் என் உதவியைக் கொடுக்க ஆசைப்பட்டென். ஆனால் அம்மா உங்கள் காரியங்கள் நிறைவேறிய பிறகு கொடுங்கள் என்று கூறினார். நானோ என்னால் இயன்ற உதவியை இன்றே செய்தால் அந்த அம்மா என்னை உடனே காப்பாற்றுவாள் என்று கூறி என் உதவியை சேர்ப்பித்தேன். என்ன ஆச்சரியம், மறுநாளே என் மகனுக்கு ஒரு வரன் வந்து பேசி முடித்தேன். சென்னைக்கே வர முடியாத சிக்கலில் மாட்டிக்கொண்டு இருந்த என் மகள், மாப்பிள்ளை, பேத்தி ஆகிய அனைவரையும் சிக்கலில் இருந்து மீட்டு, சென்னை வர வைத்தார் “பாலா அம்மா”. இந்த அனுபவங்கள் ப்டிப்பவர்களி நிச்சயமாக நெகிழவைக்கும்.
திருமதி. பத்மா, மடிப்பாக்கம்.
இது கதையல்ல நிஜம்
கடந்த 2000-ம் ஆண்டில் ஆவணி மாதம் என் தம்பி கேசவனின் மகளுக்கு திருமண் நிச்சயதார்த்தம் நடந்து கார்த்திகையில் திருமணம் நடத்த நாள் குறிக்கப்பட்டது. நடுவில் தன் தோழி வீட்டுக்குச் சென்று வந்த மணப்பெண் சாந்தாவின் போக்கில் மிகுந்த மாற்றம் காணப்பட்டது. ஏறக்குறைய பைத்தியம் பிடித்த நிலையில் மனநல மருத்துவமனையில் வைத்து பத்து நாட்கள் சிகிச்சை அளித்து பலனில்லாமல் போனபோதுதான் விஷயம் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நான் என் வீட்டு அருகில் இருக்கும் பிரம்ம சக்தி ஆலயத்தில் நடமாடும் தெய்வமாக “பாலா அம்மா”விடம் அருள்வாக்கு கேட்போம் வாருங்கள் என்று அழைத்தேன். “பாலா அம்மா” தன் அருள்வாக்கில் “அவள்் வீட்டு அருகில் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் பாதிப்பு மற்றொரு பெண்ணுக்கு இருப்பதாகவும், அதற்கு கழிப்பு கழித்துப் போட்டதை இவள் தாண்டிவிட்டதாக”வும் தெரிவித்தார். மேலும் இதற்கு 10 அமாவாசை தினத்தில் பரிகாரம் செய்யவேண்டும் என் சொன்னார். திருமணத்திற்கு மிகக் குறைந்த நாட்களே இருந்ததால் நங்கள் மன்றாடிக் கேட்டதின் பேரில் அம்மா தீவிர பரிகாரத்தில் ஏடுபட்டு எங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு தந்து அவளை குணமாக்கி, குறித்த தினத்தில் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகளுக்கு ஒரு நல்ல தாயாகவும், தன் கணவனுக்கு ஒரு நல்ல மனைவியாகவும் சிறப்பான வாழ்க்கை நடத்தி வருகிறாள்.
“நம்பினோரைக் காப்பாற்றுவாள் ப்ரம்மசக்தி” என்பதற்கு இதுவே ஒரு சான்று.