Brahmma Sakthi Temple
ப்ரம்மஸ்ரீ பாலா அம்மா அவர்களின் அவதாரத் திருநாள், ஆவணி 20, (ஞாயிறு 28-08-2016) மாலை 4:00 மணி, L. G. ஹால். ப்ரம்மஸ்ரீ பாலா அம்மா அவர்களின் சொற்பொழிவும், அன்னதானமும் நடைபெறும்.
Deities

ஸ்ரீ பாலவிநாயகர்

த்யானம்
பீஜாபூர கதேஜூ கார்முக ருஜா சக்ராப்ஜ பாசோத் -
பல வ்ரீஹ் யக்ர ஸ்வவிஷாண ரத்ன கலச ப்ரோத்யகராம் போருஹ: |

த்யேயோ வல்லபயா ஸபத்மகரயா ச்லிஷடோ ஜ்வலத் பூஷயா,
விச்வோத்பத்தி விபத்தி ஸமஸ்தி திகரோ விக்நேச இஷ்டார்தத: ||

Sree Bala Ganapathyசிறப்பு வழிபாடு

நைவேத்யம்: வெண்பொங்கல், கொழுகட்டை, சர்க்கரை பொங்கல்.

சிறப்பு பூஜை: ஒவ்வொரு திங்கட்கிழமையும் விபூதி அர்ச்சனை நடைபெறும். சங்கடஹர சதுர்த்தி அன்று சிறப்பு பூஜை நடைபெறும்.

பலன்கள்: உடல் சோர்வு, பசியின்மை, உடல் உபாதைகள் நீங்க பால கணபதிக்கு தொடர்ந்து 48 வாரம் திங்கட்கிழமைகளில் விபூதியால் அர்ச்சனை செய்து அந்த விபூதியை நெற்றியில் இட்டு, உணவுடன் உட்கொண்டுவர நலம் உண்டாகும்.

இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் பால விநாயகர் நூதன லட்சணங்களுடன் மகாசக்தி பெற்று விளங்குகிறார்.

பால விநாயகரின் துதிக்கைகள் வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ இல்லாமல் ஆசிவாதம் செய்வது போன்று அமைந்திருக்கிறது. இந்த பாலகணபதி ஈஸ்வரன் அம்சத்தையும், சக்தி அம்சத்தையும் பெற்றிருப்பதால் நெற்றிக் கண்ணும், வலது கையில் சின்முத்திரையும், இடது கையில் பூமி உருண்டையும் வைத்திருப்பது போலவும் கிரீடத்தில் சூலமும் அமைக்கப்பட்டுள்ளது.

கணபதி என்றால் நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானைக் குறிக்கும். அதுவே பிற்காலத்தில் திரிந்து கணபதி என்று வந்திருத்தல் வேண்டும். சிவன் சக்தியோடு இணைந்து காட்சி தரும்போதுதான் பிரயோகப் பிழம்பாக விளங்குகிறான். எனவேதான் நமது பாலகணபதியும் சிவசக்தி வடிவில் காட்சி தருகின்றார். இதைப் பின்வரும் கணபதி மந்திரம் உணர்த்தி நிற்கும்.

’ஓம் சிவசிவ ஓம்
ஓம் ஸ்ரீம் மகா கணபதயே நமஹ
ஓம் வயநமசி வங் கணபதி வகார கணபதியே நமஹ
ஓம் யநமசிவாயங் கணபதி ய்கார கணபதியே நமஹ
ஓம் நமசிவாயங் கணபதி நகார கணபதியே நமஹ
ஓம் மசிவாயந மங் கணபதி மகார கணபதியே நமஹ
ஓம் சிவாயநம சிங் கணபதி சிகார கணபதியே நமஹ
ஓம் ஐகணபதி ஸ்ரீம் கணபதி
உலகெலாம் உன் வசமானது போல்
எம் வசமாக ஸ்வாஹா’

Donate


ஆலய நேரம்

6:00 AM - 11:00 AM
மற்றும்
5:00 PM - 9:00 PM


அருள்வாக்கு

நேரம்: முன் பதிவு காலை 10:00 மணி வெள்ளிக்கிழமை மட்டும் பதிவு செய்தவர்கள் இருக்க வேண்டிய நேரம் மாலை 5:30 மணி


கூட்டுப் பிரார்த்தனை

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை லலிதா சஹஸ்ரநாம புஷ்ப அர்ச்சனையும் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறும்.