Brahmma Sakthi Temple
ப்ரம்மஸ்ரீ பாலா அம்மா அவர்களின் அவதாரத் திருநாள், ஆவணி 20, (ஞாயிறு 28-08-2016) மாலை 4:00 மணி, L. G. ஹால். ப்ரம்மஸ்ரீ பாலா அம்மா அவர்களின் சொற்பொழிவும், அன்னதானமும் நடைபெறும்.

About

ப்ரம்ம சக்தி என்றால் என்ன?

தானே அதுவாக, அதுவே தானக எதுவாக இருக்க வேண்டுமோ, அதுவாக விளங்கி நிற்கும் சக்தியே ப்ரம்ம சக்தி. அந்த சக்தி. ப்ரம்மா, விஷ்ணு, சிவனாகவும், அலைமகள், கலைமகள், திருமகளாகவும், மற்றும் தேவர்களாக, சித்தர்களாக, முனிவர்களாக, பல்லுயிர்களாக, ப்ரபஞ்சகளாகவும் விளங்குவது பிரம்ம சக்தியே ஆகும்.


இந்த ப்ரம்ம சக்தி மூலமும் அதுவே. முடிவும் அதுவே. இந்த சக்தியே ஒளிக்கற்றையாக மூலங்களின் மூலமாக இருந்து கொண்டு பல சொரூபங்களையும் தோற்றுவிக்க வல்லது. எல்லா க்ஷேத்திரங்களிலும் ப்ரம்மசக்தியின் பல சொரூபங்களே ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


கோவிலுக்குச் செல்ல அழைப்பு வேண்டாம்;
நினைப்பு போதும்!
ஆனால் இங்கு வர நினைப்பு மட்டும் போதாது;
பாலாவின் அழைப்பும் வேண்டும்!!

------------//---//---//-----------

எதிர்பார்ப்போடு என்னிடம் வந்து நீ ஏமாற்றம்
அடைந்தாலும் பரிதவிப்போடு நீ துயரத்தில்
இருக்கையில் பக்கத்தில் நானிருப்பேன்.....
உன் கண்ணீர் நான் துடைப்பேன்!

Brahmmasakthi

Donate


ஆலய நேரம்

6:00 AM - 11:00 AM
மற்றும்
5:00 PM - 9:00 PM


அருள்வாக்கு

நேரம்: முன் பதிவு காலை 10:00 மணி வெள்ளிக்கிழமை மட்டும் பதிவு செய்தவர்கள் இருக்க வேண்டிய நேரம் மாலை 5:30 மணி


கூட்டுப் பிரார்த்தனை

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை லலிதா சஹஸ்ரநாம புஷ்ப அர்ச்சனையும் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறும்.