
ஸ்ரீ ஸர்ப்ப காமேஸ்வரி
கீர்வாண வந்தித பதாம் புருஹே
புராணி காமக்ஷி லோக ஜனனி
கமநீய காத்ரீ காமேச்வரீ
த்ரிபுர ஸுந்தரி மாமவத்வம்
காமேஸ்வரி ஸமேத காமேஸ்வரர் ஸர்ப ரூபத்தில் இருப்பது இந்தக் கோவிலின் தனிச் சிறப்பு.
காமேஸ்வரி பெண் உடலோடு ஸர்ப்ப முகத்துடன், ஐந்து தலை நாகத்தோடு இருக்கும் ஸர்ப்ப காமேஸ்வரரை ஆசனமாகக் கொண்டு சதுர்புஜத்துடன் இடத் காலை மடக்கியும், வலது காலை தொங்கவிட்டவாறு, மடியில் குழந்தையுடன் இரு கையிலும் வில்லும் சூலமும் ஏந்தி அபய ஹரத்தோடு காட்சி அளிக்கிறாள்.
ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திரத்தின் போதும் இவளுக்கு சிறப்பான வழிபாடு உண்டு.

நைவேத்யம்: சர்க்கரை பொங்கல், மா விளக்கு, இளநீர், பானகம்.
சிறப்பு பூஜை பலன்கள்:
உத்வாகப்ராப்தி
ஸர்ப்ப காமேஸ்வரிக்கு பஞ்ச அபிஷேகம் செய்து 9 கஜம்
பட்டுப்புடவை, பன்னீர் ரோஸ் மாலை, தங்கத்தாலி(G) சாத்தி,
அர்ச்சனை செய்து, நைவேத்யம் வைத்து, தீப ஆராதனை செய்து
சர்க்கரைப் பொஙல் விநியோகம் செய்து வர விரைவில் திருமணம்
கைகூடும்.
குழந்தை பாக்கியம்
ஸர்ப்ப காமேஸ்வரிக்கு சர்க்கரைப் பொங்கல் செய்து,
வெண்ணெய் சிறிது போல் சாத்தி, வளையல்கள் வைத்து அர்ச்சனை செய்த
பிறகு, பாலா அம்மாவின் கையினால் வளையல்களும், வெண்ணையும்
வாங்கிக் கொண்டு, தம்பதியர்கள் கோயிலில் தொட்டில் கட்டி
சர்க்கரைப் பொங்கலை 5 பேருக்கு விநியோகம் செய்து வர குழ்ந்தைப்
பாக்கியம் உண்டாகும். (இதை ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திரத்தில்
செய்து வரவேண்டும்.)
படிப்பு
ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திரம் அன்று தாமிர மணி மாலை
தொடர்ந்து காமேஸ்வரி அம்மாளுக்கு சாத்தி வர ந்ல்ல ஞானத்தோடு
கல்வியில் தேர்ச்சிப் பெற்று மேன்மை அடைவார்கள்.