
ப்ரம்ம ஸ்ரீ பாலா அம்மாவின் மகிமை
ப்ரம்ம ஸ்ரீ பாலா அம்மா அவர்கள் முறையாக உபதேசம் பெற்ற “ஸ்ரீ
வித்யா உபாசகர்”. அம்மா அவர்கள் குழந்தை வடிவமான ஸ்ரீ பாலா
திரிபுர சுந்தரியை வழிபாடு செய்ததன் பலனாக 1992 ஆம் ஆண்டு
வரலக்ஷ்மி நோன்பு அன்று அம்பிகையின் அருள் கிடைத்தது. அதன்
பலனாக சத்குருவாக நின்று துன்பத்தில் இருப்பவரின் கண்ணீரை
துடைத்து இன்று நமக்கெல்லாம் வழி காட்டும் கலங்கரை விளக்கமாக
திகழ்ந்து வருபவர் அன்னை ப்ரம்ம ஸ்ரீ பாலா அம்மா.
ப்ரம்ம ஸ்ரீ பாலா அம்மா அவர்கள் கடந்த 20 வருட காலமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தன்னுடைய அருள்வாக்கால் சந்தான ப்ராப்தி, உத்வாக ப்ராப்தி, உத்தியோகம், வியாபார அபிவிருத்தி, கணவன் மனைவி ஒற்றுமை, காரிய தடைகள், கல்வித் தேர்ச்சி இவை அனைத்திற்கும் ஜாதி மத பேதமில்லாமல் வியாபார நோக்கமின்றி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நிவர்த்தி செய்து வருகிறார்.
மேலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவியும், மருத்துவ உதவியும், ஏழைகளுக்கு பொருள் உதவியும், அன்னதானமும் செய்து வருகிறார். மற்றவர்களுக்கு உதவி செய்வதே இவருடைய நோக்கம். இங்கு வரும் பக்த்தர்கள் பாலா அம்மாவை தரிசித்து தன்னுடைய சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.