Brahmma Sakthi Temple
ப்ரம்மஸ்ரீ பாலா அம்மா அவர்களின் அவதாரத் திருநாள், ஆவணி 20, (ஞாயிறு 28-08-2016) மாலை 4:00 மணி, L. G. ஹால். ப்ரம்மஸ்ரீ பாலா அம்மா அவர்களின் சொற்பொழிவும், அன்னதானமும் நடைபெறும்.
Deities

ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர்

கட்டின னின்றனன் றெழத கையினன்
விட்டுயர் தோளினன் விசும்பின் மேக்குயர்
எட்டரு நெடுமுக டெய்தி நீளாமேல்
முட்டுமென் றுருவொடும் வளைந்த மூர்த்தியான்.
Sree Viswaroopa Anjaneyar

நைவேத்யம்: தயிர்சாதம், வெண் பொங்கல், புளியோதரை, நீர்மோர், பானகம்.

சிறப்பு பூஜை: ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சாற்றி துளசியால் அர்ச்சனை செய்யப்படும். ஹனுமத் ஜெயந்தி, ஆவணி மூலம் அன்று சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் நடைபெறும்.

பலன்கள்: இவரை தொடர்ந்து வழிபடுவதால் கல்வியில் மேன்மை, வேலைவாய்ப்பு, வேலை உயர்வு, காரியதடை நிவர்த்தி, பூமி, வாகனம் வாங்குதல் போன்ற நன்மைகள் கிடைக்கும்.

ராமபக்த ஆஞ்சநேயர் இவ்வாலயத்தில் விஸ்வரூப வடிவில் காவல் காத்து வருகிறார். ஆஞ்சநேயரின் பலம் உலகறிந்த ஒன்று. அவர் இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள பாலவிநாயகர், பாலமுருகன் மற்றும் சந்தான பகவதி ஆகிய குழந்தை தெய்வங்களின் திருவிளையாடல்களைக் கண்டு ரசிப்பவராகவும், கோவிலுக்கு மற்றவர்களால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கவும் கெட்ட எண்ணங்களோடு வருபவர்களை திருந்தச் செய்து அனுப்பவும் இங்கே விஷ்ணுவின் அம்சங்களைக் கொண்டு இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார்.

7 அடி உயரதில் விஸ்வரூப ஆஞ்சநேயர் சாந்த மூர்த்தியாக நான்கு கைகளுடன், வலது பின் கையில் சக்கரத்துடனும், இடது பின் கையில் சங்குடனும் மற்ற இரண்டு முன் கைகள் கூப்பிய நிலையில் கண்களை பாதி மூடிய தியான நிலையில் காட்சியளிக்கிறார். இவர் சங்கு சக்கரத்துடன் காட்சி அளிப்பதால் மஹா விஷ்ணுவின் அம்சமாகவும் பரிமளிக்கிறார்.

ஆஞ்சநேயரின் கதாயுதம் அவர் பாதத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. கதாயுதத்தின் தலைப்பாகம் காலின் வலது பக்கமாகவும், கதையின் கைப்பிடியில் ஒரு சங்கிலி இணைத்து அந்த சங்கிலி ஆஞ்சநேயரின் இடது முன் கையில் அமைக்கப்பட்டிருக்கும் வளையத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இவருடைய உயரம் பத்ம பீடத்திலிருந்து சிரசு வரை ஏழு அடி.

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய், துளசி மாலை, வடைமாலை, வெற்றிலை மாலை போன்றவை மிகவும் பிடிக்கும். எடுத்த காரியம் நிறைவேற தினமும் ஒன்பது முறை ஆஞ்சநேயரை வலம் வர வேண்டும். மாணவ மாணவியர் தங்கள் படிப்பில் மேன்மையும் வெற்றியும் காண மற்றும் வீடு மனை வாங்க, விற்க பொன்ற வேண்டுதலுக்கு தினமும் 9 முறை வலம் வந்து துளசியால் அர்ச்சனை செய்ய நலம் உண்டாகும்.

ராமநாமம் சொல்பவர்களைக் கண்டால் ஆஞ்சநேயர் மிகவும் ஆனந்தமடைந்து விடுவர். அவர்களை எந்தவிதமான தோஷங்களும், ஏவல்களும் அண்டாமல் காத்து நிற்பார். ஏழரைச் சனியின் பிடியில் இருந்து விடுபட வேண்டுமானால் இந்த ஆஞ்சநேயரை வழிபடல் வேண்டும். மற்ற கிரஹ தோஷங்களையும் நீக்கி வைப்பதில் இவருக்கு நிகர் இவரே.

"ஓம் ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்" என்று ஓயாமல் உச்சாடனம் செய்யுங்கள். அஞ்சிலே ஒன்று பெற்ற அனுமன் நம்மை காப்பான்.

Donate


ஆலய நேரம்

6:00 AM - 11:00 AM
மற்றும்
5:00 PM - 9:00 PM


அருள்வாக்கு

நேரம்: முன் பதிவு காலை 10:00 மணி வெள்ளிக்கிழமை மட்டும் பதிவு செய்தவர்கள் இருக்க வேண்டிய நேரம் மாலை 5:30 மணி


கூட்டுப் பிரார்த்தனை

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை லலிதா சஹஸ்ரநாம புஷ்ப அர்ச்சனையும் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெறும்.